Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

தமிழ்நாடு சிறு தொழில் கூட்டுறவு லிமிடெட் (TANSI)

தமிழ்நாடு சிறு தொழில் கூட்டுறவு லிமிடெட் ஆனது 1.12.1965 அன்று டி.ஏ.என்.எஸ்.ஐ ஆக மாற்றப்பட்டது. (நிறுவனங்களின் செயல்பாடு 1956ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது). இது சிறு அளவு தொகுதிகளை உள்ளடக்குகிறது மற்றும் தொழில் மற்றும் வர்த்தகம் துறையின் மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தொகுதிகள் / பிரிவுகளானது தொடங்கப்படும் பொழுது தொழில் வளர்ச்சி பரவுதல், தொழில் முன்னேற்றத்திற்காக அடிப்படை வசதிகளை அளித்தல் மற்றும் பயிற்சி மற்றும் செய்முறை விளக்க மையத்தின் சேவை போன்ற பல்வேறு வகையான தேவைக்காக முதல் மூன்று திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த உற்பத்தி பிரிவுகளை டான்சியானது எடுத்துக் கொண்ட திட்டத்தின் குறிக்கோளை நிறைவு செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த டான்சியானது மொத்தமாக 64 பிரிவுகளை எடுத்துக் கொண்டது. மேலும் இந்த டான்சியானது இயந்திரக் கருவிகளின் உற்பத்தி, கடிகாரப் பாகங்களை இணைத்தல் மற்றும் சக்தி வாய்ந்தப் பொருட்களைத் தொடங்கியது.

டான்சியின் பொருட்களின் வரிசையைப் பின்வருமாறு ஒருங்கிணைத்தல்

ஒருங்கிணைப்பு பொருட்களின் வரிசை

  1. கட்டமைப்பு.
  2. பொறியியல்.
  3. அறைகலன்.
  4. முக்கியப் பொருட்கள்.

விற்பனை மையம்
சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை போன்ற இடங்களில் நிறுவனமானது வெளிப்புறச் சந்தை மூலம் அறைகலன் சாமான்களை பொது மக்களுக்கு விற்பனை செய்கிறது. விற்பனை மையமானது மாவட்ட கிராமிய முன்னேற்ற நிர்வாகிகள் மற்றும் உற்பத்தி பரிவுகளுக்கு இடையில் பம்ஃப் மற்றும் உதிரி பாகங்களை வழங்குதலை ஈடுபடுகிறது.
மரத்தாலாகிய அறைகலன் பிரிவு

  1. அறைகலன் வேலைகள், கிண்டி.
  2. அறைகலன் வேலைகள், புதுக்கோட்டை.
  3. அறைகலன் வேலைகள், மதுரை.
  4. அறைகலன் வேலைகள், கிருஷ்ணகிரி.
  5. அறைகலன் மற்றும் பொறியியல் வேலைகள், பேட்டை.
  6. அறைகலன் வேலைகள், கடலூர்.
 
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024